லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் | ஜனவரி 21, 2023

தினமலர்  தினமலர்
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் | ஜனவரி 21, 2023

புதுடில்லி: லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற காத்திருக்கிறது.

கடந்த 1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட் இடம் பெற்றது. இதில் இங்கிலாந்து அணி பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது. பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது. 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை என கூறப்பட்டது.

ஆனால், எந்தெந்த விளையாட்டுகள் இடம் பெற வேண்டும் என்ற இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து வரும் அக்டோபர் மாதம் நடக்கும் கூட்டத்தில் தான் முடிவெடுக்கப்பட உள்ளளது. ஒருவேளை கிரிக்கெட்டுக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் தலா 6 ஆண், பெண்கள் அணிகள் மோதும் ‘டி–20’ போட்டியாக நடக்கும்.

2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் 11,300 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அடுத்து செலவை குறைக்கும் வகையில் 2024ல் 10,500 வீரர், வீராங்கனைகள் மட்டும் பங்கேற்க உள்ளனர். இதனால் கிரிக்கெட் அணிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மூலக்கதை